சிக்னல் கிடைத்த நிலையில் சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டது
சிக்னல் கிடைத்த நிலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீடாமங்கலம்:-
சிக்னல் கிடைத்த நிலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென நிறுத்தப்பட்ட ரெயில்
தஞ்சை மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நோக்கி நேற்று அதிகாலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதற்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ரெயில்வே கேட் நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் மூடப்பட்டது.
தஞ்சை மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நோக்கி ரெயில் செல்வதற்கான சிக்னலில் பச்சை விளக்கும் ஒளிர்ந்தது. சிக்னல் கிடைத்து விட்ட நிலையில் தஞ்சை மார்க்கத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற சரக்கு ரெயில், நிலையத்தை கடந்து செல்லாமல் சிக்னலுக்கு முன்பாக ரெயில் நிலைய நடை மேடை பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டது.
தீப்பொறி
சரக்கு ரெயில் பெட்டியின் சக்கரத்தில் பிரேக் பட்டை உரசி தீப்பொறி வந்ததால் ரெயில் நிறுத்தப்பட்டது பின்னர் தெரியவந்தது. என்ஜின் டிரைவர், சரக்கு ரெயில் கார்டு மற்றும் நீடாமங்கலம் ரெயில் நிலைய ஊழியர்கள் சக்கரங்களின் அருகில் சென்று டார்ச் லைட் அடித்து பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என பார்த்தனர். அப்போது 4 மற்றும் 11-வது ரெயில் பெட்டிகளில் தீப்பொறி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில் தொடர்ந்து பயணிக்க தடைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து ரெயிலை இயக்கி சென்றனர்.
சிக்னல் கிடைத்த நிலையில் ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு உள்ள சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story