திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 Jan 2022 2:11 PM GMT (Updated: 11 Jan 2022 2:11 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

1,054 பேருக்கு தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து கடந்த 3 மாதங்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றால் 1,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 3,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,866 பேர் இறந்துள்ளனர். இந்தநிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து தங்களை நோய்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story