வீரபாண்டி அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா


வீரபாண்டி அருகே மகா காளியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 11 Jan 2022 8:25 PM IST (Updated: 11 Jan 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே தர்மாபுரி கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே தர்மாபுரி கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தும் விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி ஊரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். முன்னதாக அம்மனுக்கு பச்சை கலயம் எடுத்து செல்லுதல், காளி சூலம் எடுத்து ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி மற்றும் தேவராட்டம் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி கோலப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது விழாவில் வெங்கடாசலபுரம், ஸ்ரீரங்கபுரம், கோட்டூர், காட்டுநாயக்கன் பட்டி, பூமலைக்குண்டு உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை தர்மாபுரி கிராம மக்கள் செய்து இருந்தனர். 

Next Story