நடைபாதையில் உடைந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள் பொதுமக்கள் அவதி


நடைபாதையில் உடைந்து கிடக்கும் இரும்பு தடுப்புகள் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 11 Jan 2022 8:39 PM IST (Updated: 11 Jan 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நடைபாதையில் இரும்பு தடுப்புகள் உடைந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

கூடலூர்

கூடலூரில் நடைபாதையில் இரும்பு தடுப்புகள் உடைந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். 

உடைந்து கிடக்கும் தடுப்புகள்

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இடது பக்க நடைபாதையின் கரையோரம் இரும்பு தடுப்புகள் உள்ளன. 

இந்த இரும்பு தடுப்புகள் மீது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மோதி வருவதால் அவை உடைந்து தகர்ந்து காணப்படுகிறது. சில தடுப்புகள் நடைபாதையில் உடைந்து விழுந்து கிடக்கிறது. சில தடுப்புகள் உடைந்து சாய்ந்தபடி நிற்கிறது. 

பொதுமக்களுக்கு இடையூறு

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. உடைந்து கிடக்கும் தடுப்புகள் நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து வருகிறது. இதன் காரணமாக  அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.  

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, உடைந்து கிடக்கும் தடுப்புகளால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அந்த தடுப்புகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்தால் ஆபத்து ஏற்பட்டு விடும். 

எனவே உடைந்து கிடக்கும் இந்த தடுப்புகளை உடனடியாக அகற்றுவதுடன், அங்கு புதிய தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றனர். 


Next Story