ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிக்கான தேர்வு
ஊட்டியில் ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிக்கான எழுத்துத் தேர்வை 84 பேர் எழுதினர்.
ஊட்டி
ஊட்டியில் ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிக்கான எழுத்துத் தேர்வை 84 பேர் எழுதினர்.
எழுத்து தேர்வு
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) மூலம் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான எழுத்து தேர்வு ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. காலை 9 மணியில் இருந்து தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர்.
அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பதிவேட்டில் குறிக்கப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்கள் 7 அறைகளில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
உறுப்பினர் ஆய்வு
இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வர்களிடம் தேர்வு ஏற்பாட்டில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி எழுத வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உடனிருந்தனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது.
84 பேர் எழுதினர்
காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை புள்ளியியல் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மாலை 3 மணி முதல் 5 மணி வரை 2-வது தாள் பொது கல்வி குறித்த தேர்வு நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிக்கான எழுத்து தேர்வுக்கு நீலகிரியில் 124 பேர் விண்ணப்பித்தனர். காலையில் நடந்த தேர்வை 84 பேர் எழுதினர். 40 பேர் வரவில்லை.
Related Tags :
Next Story