காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி தாசம்பாளையம் காலனி. இங்குள்ளவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் தாசம்பாளயைம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள புஞ்சைபுளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காலிக்குடங்களுடன் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, நல்லூர் ஊராட்சி தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் சீராக வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புஞ்சைபுளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story