வடமாநில பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநோயில் இருந்து குணமான வடமாநில பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 22 வயது பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அச்சத்துடன் பரிதவித்து நின்றுள்ளார். இவரை மீட்டு செஞ்சோலை மனநலகாப்ப கத்தில் சேர்த்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார். இதன்பின்னர் அவர் தான் உத்தரபிரதேச மாநிலம் மசாக்மா படாக் சில்லா கட்னி பகுதியை சேர்ந்த தீபக்லால் மனைவி ராம்சுலி சஞ்சனாபாய் ரீட்டா (வயது22) என்பதை தெரிவித்து தன்னை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் மூலம் மேற்கண்ட சஞ்சனபாய் ரீட்டாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார். இதன்படி கடந்த சனின்கிழமை இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மோகனபிரியா, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல்நிலை காவலர் திவ்யா, தேசிய இளைஞர் தன்னார்வலர் திருமுருகன் ஆகியோர் பத்திரமாக ராம்சுலி சஞ்சனாபாய் ரீட்டாவை அழைத்து சென்றனர். மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் சப்-கலெக்டர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளதற்கு கண்ணீர் மல்க ரீட்டா நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story