பொங்கல் பண்டிகையையொட்டி அழகிய வண்ண மண்பானைகள் விற்பனை மும்முரம்


பொங்கல் பண்டிகையையொட்டி அழகிய வண்ண மண்பானைகள்   விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 11 Jan 2022 3:34 PM GMT (Updated: 11 Jan 2022 3:34 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ள அழகிய வண்ண மண்பானைகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ள அழகிய வண்ண மண்பானைகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வீடுகளில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். மேலும் கால்நடைகள் வளர்ப்பவர்கள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று தங்களது தோட்டத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோட்டில் மண்பானைகள் விற்பனை மும்முரம் அடைந்து உள்ளது. விறகு அடுப்பில் மண்பானையை வைத்து வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் மண்பானையை வாங்க பெண்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வண்ண மண்பானைகள்
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை, கொல்லம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
பெண்களை கவரும் வகையில் அழகிய வண்ணமிடப்பட்ட மண்பானைகளும் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பானைகளை பெண்கள் விரும்பி வாங்கி சென்றனர். இதேபோல் மண்ணால் செய்யப்பட்ட விறகு அடுப்புகளும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story