புதுச்சேரியில் இருந்து சங்கராபுரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல் பெண் கைது

புதுச்சேரியில் இருந்து சங்கராபுரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல் பெண் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 9:43 PM IST (Updated: 11 Jan 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து சங்கராபுரத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தல் பெண் கைது

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் அங்குள்ள மும்முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பஸ்சில் இருந்து இறங்கி வந்த பெண் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அந்த பெண் சங்கராபுரம் தாலுகா, சித்தால் கிராமத்தைச் சேர்ந்த பச்சையம்மாள்(வயது 40) என்பதும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை பஸ்சில் கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பச்சையம்மாளை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 180 மிலி கொள்ளளவுள்ள 49 மதுபாட்டில்களையும் பறிமுதல்செய்தனர். 

Next Story