காதலிக்க வற்புறுத்தி வாலிபர் தொல்லை; தூக்குப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை


காதலிக்க வற்புறுத்தி வாலிபர் தொல்லை; தூக்குப்போட்டு நர்சிங் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 10:00 PM IST (Updated: 11 Jan 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே காதலிக்க வற்புறுத்தி வாலிபர் தொல்லை கொடுத்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே காதலிக்க வற்புறுத்தி வாலிபர் தொல்லை கொடுத்ததால் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலிக்க வற்புறுத்தி வாலிபர் தொல்லை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே அகலங்கன் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி(வயது 40). இவருடைய மகள் சினேகா (19). இவர், நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 
இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. 
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த சினேகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு கொண்டார். 
அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது தம்பி சிபிராஜ், தனது அக்கா சினேகா தூக்கில் தொங்கியதை பார்த்து சத்தம் போட்டுள்ளார். 
போலீசார் விசாரணை
சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சினேகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சினேகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story