முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 Jan 2022 10:02 PM IST (Updated: 11 Jan 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம், உழவர் சந்தை, சீலப்பாடி ஆகிய பகுதிகளில் நேற்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமது கமாலுதீன் தலைமையில் சுகாதார துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும்   கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story