கொரோனா தடுப்பூசி சான்றிதழை ஆட்டோக்களில் ஒட்ட வேண்டும்-டிரைவர்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை ஆட்டோக்களின் முன்பு ஒட்ட வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி:
ஆட்டோ நிறுத்தங்களில் ஆய்வு
கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே மற்றும் 5 ரோடு ரவுண்டானா பகுதிகளில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடங்களில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஆட்டோ நிறுத்தங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட டிரைவர்களின் மொபைல் எண்களை வைத்து, அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என ‘மொபைல் ஆப்’ மூலம் சோதனை செய்தனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் ஓரிரு நாட்களில் போட்டுக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை ஆட்டோவின் முன்புறம் ஒட்ட வேண்டும்.
மேலும் தடுப்பூசி போடாமல் ஆட்டோவை இயக்குவதால் ஆட்டோ டிரைவர்கள் மட்டுமல்லாமல் பயணிக்கும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். ஆட்டோவில் பயணிக்கும் அனைவரையும் முககவசம் அணிய வலியுறுத்த வேண்டும். தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சீதாராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story