புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2022 10:34 PM IST (Updated: 11 Jan 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

புகார் பெட்டி

குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோட்டில் இருந்து வெள்ளோடு செல்லும் வழியில் குப்பக்கவுண்டன்பாளையம் பகுதி உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் குப்பை, மருத்துவக்கழிவுகள், முககவசங்கள் கொட்டப்பட்டு் உள்ளதால் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. நாளடைவில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே ரோட்டோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீமோன்பேதுரு, குப்பக்கவுண்டன்பாளையம்.


ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி

  ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. ஒரே ஒரு தனியார் மினிபஸ் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இரவில் ரெயில் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், ஈரோடு.
  
தெருவிளக்குகள் எரியுமா?

  சிவகிரி குமரன் தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், சிவகிரி.
  
தடுக்கப்படுமா?

  ஈரோடு சம்பத் நகரில் டிஜிட்டல் நூலகம் உள்ளது. இந்த நூலகம் அருகே உள்ள பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், சம்பத்நகர்.
  
பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும்

  பவானி அருகே உள்ள ஆண்டிக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட காடையம்பட்டியில் பெண்களுக்கு என தனியாக பொது கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் ஆண்களுக்காக தனியாக பொது கழிப்பறை இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பலரும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆண்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க பொது கழிப்பறை கட்ட வேண்டும்.
  பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
  
வீணாகும் குடிநீர் (படம்)

  கோபி நகராட்சி 2-வது வார்டுக்கு உள்பட்ட பகுதி ராமர் விரிவாக்கம் (எக்ஸ்டென்ஷன்) 3-வது வீதி. இந்த வீதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து அதில் இருந்து தண்ணீர் வெளியேறி அங்குள்ள சாக்கடையில் கலக்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வீணாகி செல்கிறது. மேலும் இந்த பகுதி ரோடு மின் மயானத்துக்கு செல்லும் முக்கிய ரோடாகும். எனவே இனிமேலாவது அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.
  



Next Story