போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
திருவண்ணாமலையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை லாடாவரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 22). இவருக்கும் திருவண்ணாமலை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே நெல் அறுவடை எந்திரம் ஓட்டி செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அஜீத்குமார், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவரும், அச்சிறுமியும் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோவை முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது. இதை கேட்டதற்கு அப்படி தான் செய்வேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story