ஊழியருக்கு கொரோனா தொற்றால் வங்கி கிளை மூடல் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 40 பேருக்கு பாதிப்பு
ஊழியருக்கு கொரோனா தொற்றால் வங்கி கிளை மூடப்பட்டது. மேலும் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 40 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நேருஜிநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஊழியர், திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கிளையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் இதற்கிடையே ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அந்த வங்கிக்கு கடந்த 2 நாட்களாக சென்று வந்த வாடிக்கையாளர்கள் கொரோனா அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 125 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story