நல்லம்பள்ளி அருகே காரில் கடத்திய குட்கா பறிமுதல் தந்தை மகன் உள்பட 3 பேர் கைது
நல்லம்பள்ளி அருகே காரில் கடத்திய குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தை மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து தடங்கம் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவர் மற்றும் உடன் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் (வயது42), இவரது மகனும், டிரைவருமான பிரபாகரன் (23), பிடமனேரியை சேர்ந்த மனோஜ் (22) என்பதும், பெங்களூருவில் இருந்து, தர்மபுரி மாவட்டம் பெருமாள் கோவில்மேடு பகுதிக்கு கடத்தியது தெரியவந்தது. அங்குள்ள ஒரு வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தபோது குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து டிரைவர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story