வாணியம்பாடியில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரருக்கு கொரோனா


வாணியம்பாடியில்  2 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 11:20 PM IST (Updated: 11 Jan 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

2 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரருக்கு கொரோனா

வாணியம்பாடி

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், அன்பழகன் ஆகியோருக்கும், அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் சந்திரசேகரன் ஆகிய 3 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

வாணியம்பாடி பகுதியில் தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story