நாட்டறம்பள்ளி பகுதியில் இலவசமாக முககவசம் வழங்கிய போலீசார்
இலவசமாக முககவசம் வழங்கிய போலீசார்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பகுதியில் பொதுமக்களுக்கு, போலீசார் இலவசமாக முககவசம் வழங்கினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் சார்பில் நாட்டறம்பள்ளி பகுதி முழுவதும் நேற்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிப்பிரிவு ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடைய கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணியாமல் சாலையில் சென்ற பொது மக்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கினர்.
Related Tags :
Next Story