இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2022 11:22 PM IST (Updated: 11 Jan 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

அணைக்கட்டு

பள்ளிகொண்டாவில் திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவர்த்தனம். இவரது மகன் சரவணன் (வயது 31). இவருக்கும், இவரது சகோதரியின் மகள் தனுஷியாவுக்கும் (20) கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. தனுஷியாவிற்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக மருந்து சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை சரவணன் கறவை மாடுகளுக்கு கஞ்சி காய்ச்சுவதற்காக மாட்டுப் பண்ணைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் மகளை தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக தனுஷியாவின் பெற்றோர் பிரேமா மற்றும் குமார் ஆகியோர் காலை 10 மணிக்கு வந்துள்ளனர்.

 அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தனுஷியா தூக்கில் தொங்கியவாறு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தூக்கில் இருந்தவரை மீட்டனர். தகவல் அறிந்ததும் சரவணன் வீட்டுக்கு வந்து தனுஷியாவை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். 

பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தனுஷியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உலகநாதன் வழக்குப்பதிவு செய்தார். 
தற்கொலை செய்து கொண்ட தனுஷியாவுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story