கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து அதிகாரி விசாரணை


கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து அதிகாரி விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2022 11:26 PM IST (Updated: 11 Jan 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து அதிகாரி விசாரணை


திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் உள்ளிட்ட 2 விவசாயிகள் பெயரில் நகை கடன் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விவசாயிகள் இருவரும் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கயில் நகை கடன் பெறவில்லை எனவும், தங்களது பெயரில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்து போட்டு கடன் பெற்று இருப்பதாக கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசாரும், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கூட்டுறவு வங்கில் நடைபெற்ற மோசடி குறித்து கூட்டுறவு துறை சார்பில் விசாரிக்க திருக்கோவிலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் வந்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் நகைக்கடன் மோசடி குறித்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை திருக்கோவிலூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். விசாரணை குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என கூறினார்.

Next Story