சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் பலி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 Jan 2022 11:39 PM IST (Updated: 11 Jan 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் பலியானார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சத்தியநாதன்(வயது35). கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இவர் நேற்று முன்தினம் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு இரவு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சிறுவாச்சூர் சர்வீஸ் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வேகத்தை குறைப்பதற்காக வைத்திருந்த தடுப்பின் (பேரிகார்டு) மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்
நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியநாதன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சிறுவாச்சூர் விரைந்து, சத்தியநாதனின்  உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story