புதுக்கோட்டையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 83 மாடுகள் சிறைபிடிப்பு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


புதுக்கோட்டையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 83 மாடுகள் சிறைபிடிப்பு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2022 11:43 PM IST (Updated: 11 Jan 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் சாலைகளில் சுற்றித்திரிந்த 83 மாடுகளை சிறைபிடித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை:
கால்நடைகள் 
புதுக்கோட்டையில் நகரப்பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள், கன்றுக்குட்டிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கால்நடைகளை வளர்ப்போர் தங்களது வீட்டின் அருகே கட்டி வைத்து பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு மாடு பிடி வேட்டை நடத்தினர். 
83 மாடுகள் சிறைபிடிப்பு 
இதில் சாலைகளில் படுத்திருந்த, நடமாடிய மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகளை சிறைபிடித்து வாகனம் மூலம் புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்திற்கு கொண்டு வந்து அடைத்தனர். 
இதில் மொத்தம் 83 மாடுகள் சிறை பிடிக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை அழைத்து செல்லுமாறு அதிகாாிகள் அறிவுறுத்தி உள்ளனர். அபராதம் செலுத்தாவிட்டால் மாடுகளை ஏலம் விடப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story