பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு


பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 Jan 2022 11:47 PM IST (Updated: 11 Jan 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர்:-
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழைத்தார்கள் ஏலம்
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள், பரமத்தி வேலூர் சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
அப்படி விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்கள் மொத்த வியாபாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு சுமார் 500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250- க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கு விற்பனையானது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்திற்கு சுமார் 1,500 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.150-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4 க்கு ஏலம் போனது. 
நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story