கணவன்- மனைவி உள்பட 4 பேர் கைது
சேர்ந்தமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கணவன்- மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு தம்பதி தலைமறைவாகி விட்டனர்.
சேந்தமங்கலம்:-
சேர்ந்தமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கணவன்- மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு தம்பதி தலைமறைவாகி விட்டனர்.
20 பவுன் நகை கொள்ளை
சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 53). இவர், சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலக பிட்டராக வேலை பார்த்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து இருந்தார். அவரது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர். அப்போது அவரது வீடு பூட்டிக்கிடந்தது.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியசாமியின் மகன் கிரீசன் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
தம்பதிகள்
இதுகுறித்து தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் (35) என்பவர் சேந்தமங்கலம் கோர்ட்டுக்கு வந்த போது அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சீனிவாசன் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய நண்பர்களான அரூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் மதிவாணன் (56), நடராஜன் (50), இவருடைய மனைவி லலிதா (40), சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (45), இவருடைய மனைவி கம்சலா (45) ஆகியோருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
4 பேர் கைது
இதையடுத்து போலீசார் குமார், மதிவாணன், பிரபாகரன், அவருடைய மனைவி கம்சலா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நடராஜன்- அவருடைய மனைவி லலிதா ஆகிய இருவரரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகையை போலீசார் மீட்டுள்ளனர்.
Related Tags :
Next Story