நாமக்கல்லில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 9,100 மூட்டை பருத்தி ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது.
நாமக்கல்:-
நாமக்கல்லில் நேற்று 9,100 மூட்டை பருத்தி ரூ.3½ கோடிக்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல் நேற்று ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 9,100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.3½ கோடிக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.3½ கோடிக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 79 முதல் ரூ.11 ஆயிரத்து 891 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.11 ஆயிரத்து 1 முதல் ரூ.16 ஆயிரம் வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 800 முதல் ரூ.6 ஆயிரத்து 700 வரையிலும் ஏலம் போனது.
இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
எலச்சிப்பாளையம்
நாமக்கல் விற்பனை குழுவின் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் மற்றும் ஆமணக்கு மறைமுக ஏலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு விவசாயியிடம் இருந்து 1,291 கிலோ மறைமுக ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் ரூ.69 ஆயிரத்து 843-க்கு வர்த்தகம் நடந்தது.
தேங்காய் பருப்பு 5 விவசாயிடம் இருந்து 182 கிலோ மறைமுக ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் ரூ.14 ஆயிரத்து 584-க்கு வர்த்தகம் நடந்தது. 5 விவசாயிகளிடம் இருந்து 286 கிலோ எள் மறைமுக ஏலம் நடந்தது. இதன்மூலம் ரூ.30,442-க்கு வர்த்தகம் நடந்தது.
Related Tags :
Next Story