பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்
பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நால்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் ஸ்ரீ ரெங்கம்மாள் நகர் முன்பு புங்கமரத்தடியில் பயன்படுத்தாத கரும்பு ஜூஸ் போடும் எந்திரம் உள்ளது. இதன் அருகில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கையடக்க பெட்ஷீட்டில் வைத்து கட்டைப்பையின் உள்ளே குழந்தையை வைத்து நேற்று மாலை விட்டுச்சென்றுள்ளனர். தெரு நாய்கள் குழந்தை இருந்த பையை சுற்றி வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து பையை பார்த்தபோது, அதில் பச்சிளம் பெண் குழந்தை இருந்ததை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கூறினர். ஆம்புலன்சு செவிலிய உதவியாளர்கள் வந்து குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தசம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் கண்டெடுக்கப்பட்ட அந்த பெண் குழந்தை முறைதவறி பிறந்ததா?அல்லது வளர்க்க வசதியின்றி யாரேனும் விட்டு சென்றார்களா?, கல்நெஞ்சம் படைத்த அந்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story