நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி
பண்ருட்டி அருகே நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்துள்ள கரும்பூரை சேர்ந்தவர் ராதாமணி மகன் காந்தாமணி. இதேபோல் புலவனூரை சேர்ந்த பச்சையப்பன் மகன் ஜெயமூர்த்தி. இவர்கள் இருவரும் கண்ட்ரகோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கம். அப்போது இவர்களுக்கிடையே அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது வேலை எதுவும் இல்லாமல் இருந்த வந்த காந்தாமணிக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய ஜெயமூர்த்தி, அவரது மனைவி அனிதா மற்றும் கார்த்திகேயன் மனைவி மாலதி ஆகிய 3 பேரும் சேர்ந்து ரூ.4½ லட்சம் பணம் வாங்கி உள்ளனர்.
வலைவீச்சு
ஆனால் காந்தாமணிக்கு அவர்கள் சொன்னபடி வேலை எதுவும் வாங்கித் தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி தருமாறு அவர் கேட்டதற்கு, திருப்பி கொடுக்க முன்வரவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் காந்தாமணி புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமூர்த்தி, அனிதா, மாலதி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story