3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்


3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்
x
தினத்தந்தி 11 Jan 2022 11:59 PM IST (Updated: 11 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாதத்தில்வெவ்வேறு தினங்களில் 3 நாட்கள் மதுனக்கடைகள் மூடப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாதத்தில்வெவ்வேறு தினங்களில் 3 நாட்கள் மதுனக்கடைகள் மூடப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் ஆகியவற்றை வருகிற திருவள்ளுவர் தினமான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை), வள்ளலார் நினைவு தினமான  18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), குடியரசு தினமான 26-ந் தேதி (புதன்கிழமை) மூடி வைக்க வேண்டும். அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்றைய தினங்களில் மது கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மது கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மது கூட உரிமைதாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Next Story