அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இன்று திறப்புவிழா
திருப்பூரில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்புவிழா இன்று நடைபெறுகிறது. இதை பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்புவிழா இன்று நடைபெறுகிறது. இதை பிரதமர் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அரசு மருத்துவக்கல்லூரி
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன் ரூ.350 கோடி மதிப்பில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இங்கு உடற்கூராய்வு, உயிர்வேதியியல் மற்றும் உடல் இயக்கியல் உள்பட 25 துறைகள் உள்ளன.
மேலும் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதி, கலையரங்கம், கான்பரன்சிங் அறை உள்பட பல்வேறு வசதிகளுடன் 7 தளத்தில் இந்த மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்கள் 2 பேர், இணை பேராசிரியர்கள் 12 பேர், உதவி பேராசிரியர்கள் 28 பேர், முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர் 19 பேர், இளநிலை உள்ளிருப்பு மருத்துவர் 27 பேர், ஆசிரியர்கள் 14 பேர் மற்றும் உதவி அறுவை சிகிச்சையாளர் 40 பேர் உள்பட மொத்தம் 146 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் திறந்துவைக்கிறார்
இதுதவிர அலுவலக பணிக்கு இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆட்கள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் 25 அரசு மருத்துவ கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 ஆயிரத்து 550 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 194 இடங்களும் உள்ளன. இந்நிலையில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டத்தின் கீழ் திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதியதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
Related Tags :
Next Story