கரூரில் 12 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
கரூரில் 12 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கரூர்,
பணியிட மாற்றம்
கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தாசில்தார் நிலையிலான 12 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது) பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் தற்போது கரூர் கோட்ட காவல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (தேர்தல்) பிரபு, கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது)மாற்றப்பட்டு உள்ளனர்.
அரவக்குறிச்சி தனி தாசில்தார் சிவகுமார் கலெக்டர் அலுவலக தனி தாசில்தார் (தேர்தல்) பிரிவிற்கும், கோட்ட காவல் அலுவலராக பணிபுரிந்த அமுதா தற்போது அரவக்குறிச்சி தனி தாசில்தாரராகவும், கரூர் தாசில்தாரராக பணிபுரிந்த மோகன்ராஜ் தற்போது தமிழ்நாடு வாணிப கழகம் கிடங்கு மேலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர்
அரவக்குறிச்சி தாசில்தார் பன்னீர்செல்வம் கரூர் தாசில்தாரராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாரராக பணியாற்றிய ராஜசேகரன் தற்போது அரவக்குறிச்சி தாசில்தாரராகவும், குளித்தலை தனி தாசில்தாரராக பணிபுரிந்த முருகன் (பேரிடர் மேலாண்மை) தனி தாசில்தாரராகவும், தமிழ்நாடு வாணிப கழக கிடங்கு மேலாளராக பணி புரிந்த யசோதா கிருஷ்ணராயபுரம் தாசில்தாரராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் தாசில்தாரராக பணிபுரிந்த வெங்கடேசன் குளித்தலை தாசில்தாரராகவும், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ரவிக்குமார் கரூர் தனி தாசில்தாரராகவும், கரூர் தனி தாசில்தார் செந்தில்குமார் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story