பஞ்சு மில்லில் தீ விபத்து ரூ7 லட்சம் பொருட்கள் சேதம்


பஞ்சு மில்லில் தீ விபத்து ரூ7 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 12 Jan 2022 12:42 AM IST (Updated: 12 Jan 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம் அருகே பஞ்சு மில்லில் தீ விபத்தில் ரூ7 லட்சம் பொருட்கள் சேதம்

மங்கலம்
திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சி கிடாத்துறை புதூர்பிரிவில் மோகன்ராஜ் (வயது25) என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் உள்ளது. பஞ்சு மில்லில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது நேற்று  மதியம் 3 மணி அளவில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டு தீப்பற்றியது. இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் பஞ்சுமில் உரிமையாளருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் 4 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிடாத்துறைபுதூர் பிரிவு பகுதியில் உள்ள பஞ்சு மில்லில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள், எந்திரங்கள்  சேதமானது என மில் உரிமையாளர் தெரிவித்தார்.

Next Story