கிராம மக்களுடன் சேர்ந்து ம.தி.மு.க. எம்.எல்.ஏ. திடீர் மறியல்


கிராம மக்களுடன் சேர்ந்து ம.தி.மு.க.  எம்.எல்.ஏ. திடீர் மறியல்
x
தினத்தந்தி 11 Jan 2022 7:44 PM GMT (Updated: 11 Jan 2022 7:44 PM GMT)

ரேஷன் கடை ஆய்வின் போது கிராம மக்களுடன் இணைந்து ம.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆலங்குளம், 
ரேஷன் கடை ஆய்வின் போது கிராம மக்களுடன் இணைந்து ம.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் ரகுராமன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 
எம்.எல்.ஏ. ஆய்வு 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கீழராஜகுலராமன் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
அப்போது ஒரு சில பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ.வான டாக்டர் ரகுராமனிடம் புகார் அளித்தனர். 
அதன்பேரில் ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் தன்ராஜ், கூட்டுறவு பதிவாளர் சீனி பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
சாலை மறியல் 
இந்தநிலையில் ரகுராமன் எம்.எல்.ஏ. திடீெரன கிராம மக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 
அப்போது, தாசில்தார் மற்றும் ரேஷன் ெபாருள் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
மேலும் சம்பவ இடத்திற்கு கலெக்டர் அல்லது போலீஸ் சூப்பிரண்டு வந்து இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுேபான்ற தவறுகள் வராத வண்ணம் பார்த்து ெகாள்கிறோம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story