விசாரித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
ராஜேந்திர பாலாஜி மீது அளிக்கப்பட்டுள்ள புகார் விசாரித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவர் எண்-2 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித்தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்னிடம் ரூ. 16 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரம்வீர், இதுபற்றி மாவட்ட குற்றவியல் போலீசார் விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story