கதண்டு கடித்து சலவை தொழிலாளி சாவு


கதண்டு கடித்து சலவை தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 Jan 2022 1:37 AM IST (Updated: 12 Jan 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே கதண்டு கடித்து சலவை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே கதண்டு கடித்து சலவை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
கதண்டு கடித்தது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஊராட்சியை சேர்ந்த வளையக்காடு பகுதியில் சாலையோரத்தில் உள்ள மரங்களில் இருந்த கதண்டு கடந்த சில தினங்களாக அவ்வழியே செல்வோரை கடித்து துன்புறுத்தி வந்தது. இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளி பக்கிரிசாமி (வயது65) என்பவர் கடந்த 9-ந் தேதி மாலை சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரைக் கதண்டு கடித்தது.
சலவை தொழிலாளி சாவு
இதில் காயமடைந்து மயங்கி விழுந்த பக்கிரிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பக்கிரிசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story