திருமுக்குளத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர்
எண்ணெய்க்காப்பு உற்சவத்திற்காக திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மார்கழி நீராட்டு எண்ணெய்க்காப்பு உற்சவம் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் அருகே எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஆண்டாளுக்கு ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்திலிருந்து புனிதநீர் குடங்களில் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு ஆண்டாள் கோவிலில் நடைபெறும் தைலக்காப்பு விழாவிற்கு ஆண்டாள்கோவில் யானைமீது குடத்தில் திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
Related Tags :
Next Story