ஆடு திருடிய வாலிபர் கைது
ஆடு திருடிய வாலிபர் கைது
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்த லாசர் என்பவர் வீட்டின் அருகே மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். அங்கு 2 தினங்களுக்கு முன் ஆடு திருட்டு போனது. இது குறித்து லாசர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார்மடம் பகுதியை சேர்ந்த அன்சில் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அன்சில் தாயார் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதாகவும். இந்தநிலையில் மேல் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டதால், குழிக்கோடு பகுதியை சேர்ந்த நண்பர் சாரோன்பிரபுவுடன் சேர்ந்து ஆட்டை திருடி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் விற்றது தெரிய வந்தது. ஆடு சினையாக இருந்ததால், அதை இறைச்சிக்கடைக்காரர் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதனால் அன்சில் சுலபமாக பிடிபட்டார். தலைமறைவான சாரோன் பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story