குலசேகரம் அருகே 2 கோவில்களில் உண்டியல் திருட்டு


குலசேகரம் அருகே 2 கோவில்களில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 12 Jan 2022 1:58 AM IST (Updated: 12 Jan 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே 2 கோவில்களில் உண்டியல் திருட்டு

குலசேகரம், 
 குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு பகுதியில் குளத்தின்கரை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 2 அம்மன் சன்னதிகளின் முன் உண்டியல்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பணத்துடன் உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. 
குலசேகரம் உண்ணியூர்கோணம் பூலாங்கோடு பகுதியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலையும் திருடிச் சென்றனர். 
இதேபோல், தும்பகோடு அரசமரத்தடியில் உள்ள கணபதி கோவில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
இந்த சம்பவங்கள் குறித்து கோவில்களின் நிர்வாகிகள் குலசேகரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story