பட்டாசு ஆலை விபத்து என தீயணைப்பு வீரர்களை அலைய வைத்த நபர்


பட்டாசு ஆலை விபத்து என தீயணைப்பு வீரர்களை அலைய வைத்த நபர்
x
தினத்தந்தி 12 Jan 2022 1:58 AM IST (Updated: 12 Jan 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து என தீயணைப்பு வீரர்களை அலைய வைத்த நபர் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

சிவகாசி, 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம் தொலைபேசிக்கு நேற்று காலை 10.15 மணிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் சிவகாசி சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கூறிவிட்டு செல்போனை துண்டித்துவிட்டார். இதை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் மின்னல் வேகத்தில் சித்துராஜபுரம் சென்றது. பின்னர் அந்த பகுதியில் விசாரித்த போது தீ விபத்து ஏதும் நடக்கவில்லை என்று தெரியவந்தது. சித்துராஜபுரம்- விஸ்வநத்தம் ரோட்டில் ஒரு பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள காலி இடத்தில் இருந்த முட்செடிகளை யாரோ மர்மஆசாமிகள் தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து தீ விபத்து என அலைக்கழிக்கப்பட்டதை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் நிலையம் திரும்பினர். பின்னர் தீ விபத்து குறித்து நிலையத்துக்கு தகவல் தெரிவித்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்ற போது அந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. செல்போனில் பேசிய மர்மநபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story