ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 2:16 AM IST (Updated: 12 Jan 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியனை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் தற்செயல் விடுப்புபோராட்டம் நடத்தினர். மொத்தமுள்ள 580 ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களில் 380 பேரும், 450 பஞ்சாயத்து செயலர்களில் 150 பேரும் ஆக மொத்தம் 530 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.


Next Story