கொரோனா பரவலுக்கு மத்தியிலும் காங்கிரஸ், 3-வது நாளாக பாதயாத்திரை
மேகதாது திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கொரோனா பரவலுக்கு மத்தியிலும் காங்கிரசின் பாதயாத்திரை நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது. இதில் சித்தராமையா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்.
பெங்களூரு: மேகதாது திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கொரோனா பரவலுக்கு மத்தியிலும் காங்கிரசின் பாதயாத்திரை நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது. இதில் சித்தராமையா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் பாதயாத்திரை
மேகதாது திட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சி கடந்த 9-ந் தேதி தடையை மீறி கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமத்தில் பாதயாத்திரையை தொடங்கியது. இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் கனகபுராவில் முடிவடைந்தது. டி.கே.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் அங்கு தங்கினர். இந்த நிலையில் 3-வது நாள் பாதயாத்திரை நேற்று காலை தொடங்கியது. இதில் காய்ச்சலால் நேற்று முன்தினம் ஓய்வில் இருந்த சித்தராமையா நேற்று கலந்து கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர்.
வழியெங்கும் தலைவர்கள் மீது தொண்டர்கள் பூமழை பொழிந்தனர். இந்த பாதயாத்திரை கானாலு கிராமத்திற்கு நேற்று மதியம் வந்தது. அங்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்று உணவு சாப்பிட்டனர்.
பிடதியில் தடுத்து நிறுத்த...
அதன் பிறகு சிறிது நேரம் அங்கு ஓய்வு எடுத்தனர். பிறகு மாலை 5 மணி அளவில் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்றது. அந்த பாதயாத்திரை நேற்று இரவு சிக்கேனஹள்ளி கிராமத்தில் முடிந்தது. அங்கு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கினர். இன்று (புதன்கிழமை) காலை 8 மணியளவில் 4-வது நாள் பாதயாத்திரை தொடங்குகிறது. பாதயாத்திரையில் சமூக இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டது.
அந்த பாதயாத்திரையில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பரவி இருக்கும் என்று மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார். அதனால் இந்த பாதயாத்திரையை பெங்களூருவுக்குள் நுழைய விடாமல் பிடதியில் தடுத்து நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story