பெங்களூருவில் பள்ளி-கல்லூரிகளை மூடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு


பெங்களூருவில் பள்ளி-கல்லூரிகளை மூடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு
x
தினத்தந்தி 12 Jan 2022 2:23 AM IST (Updated: 12 Jan 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூடுவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என மந்த்ரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- 
பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் பள்ளி-கல்லூரிகளை மூடுவது குறித்து ஓரிரு நாளில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதுகுறித்து நிபுணர் குழுவின் ஆலோசனை கேட்கப்படும். கொரோனா பரவல் எங்கெங்கு அதிகரித்து வருகிறதோ அங்கும் பள்ளி-கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும். குழந்தைகளின் உடல்நலன் தான் அரசுக்கு முக்கியம். இதில் அரசு சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது 10 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story