தொலைபேசி மூலம் பசவராஜ் பொம்மையிடம் நலம் விசாரித்தார், மோடி


தொலைபேசி மூலம் பசவராஜ் பொம்மையிடம் நலம் விசாரித்தார், மோடி
x
தினத்தந்தி 12 Jan 2022 2:26 AM IST (Updated: 12 Jan 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

பசவராஜ் பொம்மையுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார்.

பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதற்கிடையே கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் பசவராஜ் பொம்மை நேற்று தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பசவராஜ் பொம்மையை தொலைபேசியில் அழைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். 

உடல்நிலையை கவனித்து கொள்ளும்படி அறிவுரை கூறினார். அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மோடியிடம் அவர் விளக்கி கூறினார். தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும், இதுவரை தடுப்பூசி செலுத்திய விவரங்களையும் அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார். இந்த தொலைபேசி உரையாடல் நேற்று மாலை 4.30 மணியளவில் தொடங்கி 5 நிமிடங்கள் நீடித்தன. மேலும், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தும்படி மோடி கூறினார்.

Next Story