பிற மாவட்டங்களில் இருந்துபுறப்பட்ட மக்கள் தஞ்சையில் குவிந்தனர்
பொங்கல் பண்டிகையை கொண்டாட பிற மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மக்கள் தஞ்சையில் குவிந்தனர். இவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்;
பொங்கல் பண்டிகையை கொண்டாட பிற மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மக்கள் தஞ்சையில் குவிந்தனர். இவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் பணி புரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்
அதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, உள்ளிட்ட பகுதிகளுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்கள் மூலம் திருச்சிக்கு வந்தனர்.
அங்கிருந்து பஸ்சில் புறப்பட்டு தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பிற மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு திரும்பியதால் நேற்றுமாலை தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. அங்கிருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு செல்வதற்காக மக்கள் காத்திருந்தனர்.
மாற்று ஏற்பாடு
கும்பகோணம் பகுதிகளுக்கு செல்ல மக்கள் அதிகஅளவில் காத்து இருந்ததால் உடனே திருச்சியை நோக்கி செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை மாற்று ஏற்பாடாக கும்பகோணத்திற்கு மக்கள் ஏற்றி செல்வதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதேபோல் எந்தந்த பகுதிகளுக்கு பஸ்கள் தேவையோ அந்த பகுதிகளுக்கு இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story