ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பொன்ராஜ், செயலாளர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மீதான நெருக்கடிகளை கைவிட வேண்டும். 2019-ம் ஆண்டு ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையை சிறப்பு துறையாக அறிவித்து வளர்ச்சி துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பஞ்சாயத்து செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற்றது. இதனால் ஊரக வளர்ச்சி துறை பணிகள் பாதிக்கப்பட்டதுடன், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story