ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு


ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
x

வள்ளியூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள மேல சண்முகபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு வள்ளியூருக்கு பொருட்கள் வாங்குவதற்காக பன்னீர்செல்வம் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பன்னீர்செல்வம் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story