கரும்பு விற்பனை குறைந்தது


கரும்பு விற்பனை குறைந்தது
x
தினத்தந்தி 12 Jan 2022 4:56 PM IST (Updated: 12 Jan 2022 4:56 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு விற்பனை குறைந்தது

பல்லடத்தில் பொங்கல் பண்டிகைக்காக வியாபாரிகள் கரும்பு கொள்முதல் செய்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு, மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கரும்பு வியாபாரம் குறித்து கவலையில் கரும்பு வியாபாரிகள் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
பொங்கல் பண்டிகைக்காக கரும்பு விவசாயிகளிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை முன்பணம் கொடுத்துள்ளோம் கரும்புகள் விற்பனையான பிறகு மீதிப் பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளோம். இந்த நிலையில் அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடால் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கரும்பு விற்பனை செய்யமுடியவில்லை. மேலும் அரசாங்கம் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகளுக்கு தடை போட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் கரும்பு வியாபாரம் எப்படி நடக்கும் என்று தெரியவில்லை கரும்பு விவசாயிகளிடம் விலையை குறைக்குமாறு கேட்டுள்ளோம். பொங்கலுக்கு கரும்பு விற்பனை ஆகவில்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story