லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 7:21 PM IST (Updated: 12 Jan 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

சாலையில் கற்கள் விழுவதால் லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
லாரிகள் சிறை பிடிப்பு 
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் ஏராளமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கல் மற்றும் ஜல்லிக்கற்களை ஏற்றிச்செல்லும்போது அவைகள் ரோட்டில் சிதறி விழுகின்றன. இதற்குப் பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கற்கள் திடீரென விழுவது தெரியாமல் அதன்மேல் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.  எனவே உரிய பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கற்களை ஏற்றிச்செல்லவேண்டும் என கோடங்கிபாளையம் பொதுமக்கள் லாரி உரிமையாளர்களிடம் பல முறை கூறியதாக கூறப்படுகிறது.
 இதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் நேற்று கோடங்கிபாளையம் மாரியம்மன் கோவில் முன்பு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த வழியாக வந்த  30க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் தாசில்தார் தேவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் காவி பழனிச்சாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் லாரி உரிமையாளர்களை அங்கு வரவழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாற்று வழி
 இதில் இனி ரோடுகளில் ஜல்லி கற்கள் விழாத வண்ணம் கொண்டு செல்வது, ஊருக்குள் செல்லும் ரோட்டிற்கு பதிலாக மாற்று வழியில் கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்லாரிகள் சிறைப்பிடிப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story