ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்
சாத்தூர் பகுதி ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆலங்குளம்,
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழராஜகுலராமன் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அப்போது ஒரு சில பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் ரகுராமனிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் ரகுராமன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், திடீெரன கிராம மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். ்
இந்தநிலையில் ரகுராமன் எம்.எல்.ஏ. புகார் தொடர்பாக சத்திரப்பட்டி கூட்டுறவு பண்டக சாலை தலைவர் சுந்தரராஜ், கீழராஜகுலராமன் கிராம ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர் தங்கத்திடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சரியான விளக்கம் அளிக்காததால் விற்பனையாளர் தங்கத்தை சத்திரப்பட்டி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுந்தரராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story