அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Jan 2022 8:43 PM IST (Updated: 12 Jan 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. மகளிர் அணி பொறுப்பாளராக இருப்பவர் ரீட்டா (வயது42). இவரைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ், வேறு ஒரு பெண்ணிடம் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாகவும், எனவே மான்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ரீட்டா அளித்த இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக மான்ராஜ் எம்.எல்..ஏ. மற்றும் முனியாண்டி, இன்னாசி அம்மாள், ராமையா பாண்டியன் ஆகிய 4 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக இன்னாசி அம்மாளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story