மாவட்ட செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை + "||" + Worker drinks poison and dies

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நெல்லையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
நெல்லை:
நெல்லை டவுன் செண்பகம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.